ஏனையவை

மீண்டும் பிரதமராக பதவியேற்ற ஹரிணி அமரசூரிய

Share
22 7
Share

மீண்டும் பிரதமராக பதவியேற்ற ஹரிணி அமரசூரிய

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Harini Amarasuriya) முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அத்துடன் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கள் பிரதமரின் பொறுப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலில் ஹரிணி அமரசூரிய கொழும்பு மாவட்டத்தில் பெற்ற 655,289 விருப்பு வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றிருந்தார்.

இதேவேளை, விஜித ஹேரத் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாக கம்பஹா மாவட்டத்தில் இருந்து விஜித ஹேரத் பெற்ற விருப்பு வாக்குகள் வரலாற்றில் இடம்பெறுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

இதன்போது, தமிழ் மொழியில் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) சத்தியபிரமாணத்தை செய்துகொண்டார்.

மேலும், சுனில் ஹதுன்நெத்தி – கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Share
Related Articles
27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...

3 2
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகில் மிகவும் வயதானவர் 116 வயதில் காலமானார்

உலகின் மிக வயதானவராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேசிலிய கன்னியாஸ்திரி சகோதரி இனா கனபரோ லூகாஸ்(Inah Canabarro Lucas),...