2 1 10
ஏனையவை

பிகில் வசூல் சாதனையை முறியடித்த அமரன்.. 18 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா

Share

பிகில் வசூல் சாதனையை முறியடித்த அமரன்.. 18 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா

தமிழ் சினிமாவில் தற்போது தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், அமரன் படத்தின் மூலம் வசூல் சாதனையை தொடர்ந்து படைத்து வருகிறார்.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவான இப்படம், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி முதல் முறையாக நடித்திருந்தார். முதல் நாளில் இருந்தே வசூலில் சக்கப்போடு போட்டு வரும் அமரன் படம் 18 நாட்களில் உலகளவில் ரூ. 294 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இதன்மூலம் 2019ல் வெளிவந்த தளபதி விஜய்யின் பிகில் படத்தின் மொத்த வசூலையும் முறியடித்துள்ளது. பிகில் படம் உலகளவில் ரூ. 292 கோடி வரை வசூல் செய்திருந்த நிலையில், அமரன் ரூ. 294 கோடிக்கும் மேல் வசூல் செய்து, பிகில் சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...