20 7
ஏனையவை

கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த அமெரிக்க போர்க் கப்பல்

Share

கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த அமெரிக்க போர்க் கப்பல்

அமெரிக்க(us) கடற்படைக்கு சொந்தமான யுஎஸ்எஸ் மைக்கல் மர்பி என்ற போர்க்கப்பல் இன்று (நவம்பர் 16, 2024) வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இவ்வாறு வந்த கப்பலை, இலங்கை கடற்படையினர்(sri lanka navy) கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்றனர்.

இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Arleigh Burke class guided missile detroer ‘USS Michael Murphy’ என்ற போர்க்கப்பலானது 155.2 மீட்டர் நீளமும், மொத்தம் 333 கடற்படையினரை கொண்டதுடன் கொமாண்டர் ஜொனாதன் பி. கிரீன்வால்ட் உள்ளார்.

மேலும், வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்த பின்னர், ‘USS Michael Murphy’கப்பல் நவம்பர் 17, 2024 அன்று கொழும்பு துறைமுகத்தை விட்டு புறப்பட உள்ளது.

அண்மையில்தான் இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்க்கி கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...