26 5
ஏனையவை

கனேடியர்களை நாட்டை விட்டு வெளியேற கூறிய காலிஸ்தானியர்கள்: சர்ச்சையை ஏற்படுத்திய காணொளி

Share

கனேடியர்களை நாட்டை விட்டு வெளியேற கூறிய காலிஸ்தானியர்கள்: சர்ச்சையை ஏற்படுத்திய காணொளி

கனடாவில்(Canada) வாழும் கனேடிய மக்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு காலிஸ்தானியர்கள் தெரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவில் காலிஸ்தானி இயக்கத்தின் மையமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் நடந்த காலிஸ்தானி நிகழ்வில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது பதிவு செய்யப்பட்ட காணொளியில், “இது கனடா, எங்களின் சொந்த நாடு. நீங்கள்(கனேடியரகள்) திரும்பி செல்லுங்கள்.

வெள்ளையர்கள் மீண்டும் ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலுக்கு செல்ல வேண்டும். இது நம் நாடு, திரும்பி செல்லுங்கள். நாங்கள் தான் இந்த நாட்டின் உரிமையாளர்,” என காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, முதன்முறையாக, கனடாவில் காலிஸ்தானிக்கு ஆதரவான கூறுகள் இருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டதுடன் அவர்கள் “ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை” என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த சர்ச்சையை ஏற்படுத்திய காலிஸ்தானியர்களின் காணொளி வெளியாகியுள்ளது.

காலிஸ்தான் அமைப்பின் உறுப்பினரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட பின்னணியில், இந்தியா மற்றும் கனடா உயர் அதிகாரிகள் பல குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வந்ததால் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...