19 7
ஏனையவை

பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஆணைக்குழு விடுத்துள்ள பணிப்புரை

Share

பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஆணைக்குழு விடுத்துள்ள பணிப்புரை

தேர்தல் முடிவுகள் வெளியாகி 21 நாட்களுக்குள் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது செலவு அறிக்கையை தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Rathnayake) தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று (16) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, காலக்கெடு முடிந்த பிறகும் செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராக ஏற்கனவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பொதுத் தேர்தலிலும் செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
2024 11 25 Pudukkudiyiruppu MV 2
ஏனையவை

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு: 275 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வரும்...

images 7 2
ஏனையவை

டெல்லி கார் வெடிப்பு ‘தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்’: இந்தியாவுக்கு உதவியளிக்கத் தயார் என அமெரிக்கா அறிவிப்பு!

இந்தியத் தலைநகர் டெல்லியில் அண்மையில் இடம்பெற்ற கார் வெடிப்புச் சம்பவத்தை, ஒரு “தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்”...