அமரன் படம் மாஸ் வெற்றி, தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய சாய் பல்லவி… எவ்வளவு தெரியுமா?
அமரன் படம், இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை, நாட்டிற்காக அவர் போராடிய விஷயம் என அனைத்தையும் பற்றி கூறும் படமாக அமைந்தது.
சிவகார்த்திகேயன் முகுந்த் கதாபாத்திரத்தில் மிகவும் திறமையாக நடித்துள்ளார், அவரது நடிப்பை தாண்டி முகுந்த் மனைவியாக நடித்த சாய் பல்லவிக்கு அதிக பாராட்டுக்கள் கிடைத்துள்ளது.
அவர் கடைசி நிமிட காட்சிகளில் செம ஸ்கோர் செய்துவிட்டார் என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
அமரன் படமும் வெளியாகி வசூலில் செம பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற்று வருகிறது.
தற்போது அமரன் படம் நல்ல வெற்றியை எட்டியதால் நடிகை சாய் பல்லவி தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம்.
இதுவரை ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கிய சாய் பல்லவி அமரன் பட மாஸ் வெற்றிக்கு பிறகு ரூ. 6 கோடி சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.