24 6678dbc9e016f
ஏனையவை

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு: இலங்கை அரசு அறிக்கை

Share

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு: இலங்கை அரசு அறிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர பிரித்தானியா (United Kingdom) எடுத்த முடிவை இலங்கை வரவேற்றுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சாப்ரி தெரிவித்துள்ளார்.

இதன்படி தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியாவில் தொடரும் என்றும் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் (United Kingdom) தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின், மேல் நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் இரண்டு ஓய்வுபெற்ற மூத்த இராஜதந்திரிகளின் தலைமையில் நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்ட சுயாதீன நீதிமன்றமான, தடைசெய்யப்பட்ட அமைப்பு முறையீடுகள் ஆணைக்குழு இந்த தீர்ப்பை அறிவித்துள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சாப்ரி குறிப்பிட்டுள்ளார்.

வட கிழக்கு இலங்கையில் சுதந்திர தமிழ் அரசை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமே, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு பிரித்தானியாவிடம் விண்ணப்பித்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், பிரித்தானியாவில் தடை செய்யப்படவில்லை. அது வன்முறையற்ற வழிமுறைகளின் மூலம் அரசியல் மற்றும் கருத்தியல் நோக்கங்களைத் தொடர முயற்சிக்கும் காரணத்தினால் அதனை அந்த நாடு தடை செய்யவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

மூலோபாயமும்,வெளிநாட்டு அரசாங்கங்களை விடுதலைப் புலிகளின் தடையை நீக்கச் செய்வதன் மூலம் அந்த அமைப்பை புத்துயிர் பெறச் செய்வதாகும் என வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...