ஏனையவை
உலகை அச்சுறுத்தி வரும் நோய்த்தாக்கம் : விதிக்கப்பட்ட இறக்குமதி தடை
உலகை அச்சுறுத்தி வரும் நோய்த்தாக்கம் : விதிக்கப்பட்ட இறக்குமதி தடை
பறவைக் காய்ச்சல் பதிவாகியுள்ள எந்தவொரு நாட்டிலிருந்தும் விலங்குகள் அல்லது விலங்குகளுக்கான பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தினை இன்று(23.06.2024) திணைக்களத்தின் தலைமை இயக்குநர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக பல நாடுகளில் பதிவாகியுள்ள ஏவியன் இன்புளுவன்சா A(H5N1) வைரஸ் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டைப் பாதுகாக்கவே கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், அமெரிக்காவின் பல மாநிலங்களில் முதன்முறையாக கால்நடைகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே இது ஒரு தீவிரமான நிலைமை என்றும் கொத்தலாவல குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தற்போது மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் யாரும் தேவையற்ற அச்சம் அடைய வேண்டாம் எனவும் விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள இயக்குநர் ஹேமாலி கேட்டுக்கொண்டுள்ளார்.