malabika 6667bd2bf0867
ஏனையவைசினிமாபொழுதுபோக்கு

பிரபல சீரியல் நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Share

பிரபல சீரியல் நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல பாலிவுட் நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியிருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை மாலாபிகா தாஸ் என்பவர் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த நிலையில் அவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அவருக்கு வயது 31.

மும்பையில் நடிகை மாலாபிகா தாஸ் தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அந்த பகுதி மக்கள் காவல்துறைக்கு புகார் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு உடனே வந்த காவல்துறையினர் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நடிகை மாலாபிகா தாஸ் உடல் சிதைந்த நிலையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.

நடிகை மாலாபிகா தாஸ் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் இந்த நிலையில் திடீரென அவர் ஜூன் 4ஆம் தேதியே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் தற்கொலை குறித்து கடிதம் எழுதும் கிடைக்கவில்லை என்றும் காவல்துறையினர் கூறியுள்ள நிலையில் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘தி டிரையல்’ என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் நடிகை மாலாபிகா தாஸ் இடம் பிடித்தார் என்பதும், இந்த சீரியலில் நடிகை கஜோல் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
dhanush tamannah mrunal thakur kriti sanon nighrt party photos out1751607404 4
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் தனுஷ் – மிருணாள் தாக்குர் கிசுகிசு: இன்ஸ்டாகிராம் கமெண்ட்டால் மீண்டும் விவாதம்!

கோலிவுட்டில் பிஸியான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாக்குர் (Mrunal...

25 692437caced28
சினிமாபொழுதுபோக்கு

AK 64 ஷூட்டிங் பிப்ரவரியில் ஆரம்பம்: குட் பேட் அக்லி வெற்றிக்குப் பின் ஆதிக் ரவிச்சந்திரனின் அதிரடி அறிவிப்பு!

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் இந்த ஆண்டு வெளிவந்த ‘குட்...

MediaFile 19
சினிமாபொழுதுபோக்கு

அர்ஜுன் தாஸின் புதிய படத்திற்கு ‘சூப்பர் ஹீரோ’ எனத் தலைப்பு: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழில் பிரம்மாண்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்தாலும், சூப்பர் ஹீரோ திரைப்படங்களின் உருவாக்கங்கள் குறைவாகவே இருக்கின்றன. இந்தச்...