Mahinda Ranil 2 1 6 scaled
ஏனையவை

புடின் இறந்திருக்கலாம்..! எழுந்துள்ள புதிய சர்ச்சை

Share

புடின் இறந்திருக்கலாம்..! எழுந்துள்ள புதிய சர்ச்சை

சோவியத் யூனியனின் முன்னாள் தலைவரும் சர்வாதிகாரியுமான ஸ்டாலினுடைய பேரன், ரஷ்ய ஜனாதிபதி இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளார்.

ரஷ்ய அரசியலில் ஈடுபாடு கொண்டவரான ஜேக்கப், புடின் இறந்திருக்க அதிக வாய்ப்புள்ளது என்றும், கிரெம்ளின் வட்டாரத்தைச் சேர்ந்த, தேர்வு செய்யப்படாத சிலர், நடிகர்கள் சிலரை புடின் போல நடிக்கவைத்துவிட்டு, அவர்களை பின்னாலிருந்து கட்டுப்படுத்திவருவதாகவும் கூறியுள்ளார்.

உக்ரைன் இராணுவ உளவுத்துறையும், புடினுக்கு பதிலாக போலிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக நீண்ட நாட்களாக கூறிவருகிறது.

அத்துடன், ரஷ்யாவிலேயே சிலர் புடின் இறந்துவிட்டதாகவும்,அவருக்கு பதிலாக போலிகளை நடிக்கவைத்து சிலர் அரசைக் கட்டுப்படுத்திவருவதாகவும் கருதுகிறார்கள்.

வேறு சிலரோ, புடின் கடுமையாக நோய் வாய்ப்பட்டுள்ளதாலோ அல்லது தனது பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக பதுங்குகுழியில் பதுங்கியிருப்பதாலோ அவருக்கு பதிலாக போலிகள் பயன்படுத்தப்படுவதாக கூறுகிறார்கள்.

இதற்கிடையில், இந்த ஆண்டின் துவக்கத்தில், தனது பாடசாலை தோழர்களுக்கே தன்னை அடையாளம் தெரியவில்லை என்று கூறி புடின் சந்தேகத்தை அதிகமாக்கினார்.

இந்நிலையில், புடின் இறந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறும் ஸ்டாலினுடைய பேரனான ஜேக்கப், இப்போதிருக்கும் புடின், தான் ஒரு செல்வாக்கான அதிகாரம் மிக்க நபர் என்பது போல நடந்துகொள்வதில்லை என்றும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...