5
ஏனையவை

மகிந்தவின் சாதனையை முறியடித்து வரலாற்றில் இடம்பிடித்தார் பிரதமர் ஹரிணி

Share

மகிந்தவின் சாதனையை முறியடித்து வரலாற்றில் இடம்பிடித்தார் பிரதமர் ஹரிணி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya), முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksa) சாதனையை முறியடித்துள்ளார்.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, 655,289  என்ற அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு நாடாளுமன்ற வேட்பாளர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாக பிரதமர் ஹரிணி பெற்ற வாக்குகள் இடம்பிடித்துள்ளன.

இதற்கு முன்னர், நாடாளுமன்ற தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற  இலங்கையின் அரசியல்வாதியாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காணப்பட்டார்.

அவர், கடந்த 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது குருநாகல் மாவட்டத்தில் 527,364 என்ற அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இந்த நிலையில், குறித்த சாதனையை இம்முறை இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக பிரதமர் ஹரிணி முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
2024 11 25 Pudukkudiyiruppu MV 2
ஏனையவை

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு: 275 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வரும்...

images 7 2
ஏனையவை

டெல்லி கார் வெடிப்பு ‘தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்’: இந்தியாவுக்கு உதவியளிக்கத் தயார் என அமெரிக்கா அறிவிப்பு!

இந்தியத் தலைநகர் டெல்லியில் அண்மையில் இடம்பெற்ற கார் வெடிப்புச் சம்பவத்தை, ஒரு “தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்”...