உலகம்ஏனையவைசெய்திகள்

கேரளாவில் பயங்கர விபத்து: 5 பேர் பரிதாப மரணம்

Share

கேரளாவில் பயங்கர விபத்து: 5 பேர் பரிதாப மரணம்

கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து, ஆட்டோ மீது மோதியதால் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே குட்டிப்பாறை பகுதியை சேர்ந்த 7 பேர் நேற்று மாலை ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அப்துல் மஜித்(55) என்பவர் ஆட்டோ ஓட்டினார். அவர்கள் செட்டியங்காடு என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களின் பேருந்து எதிரே வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ சுக்கு நூறாக நொறுங்கியது.

இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் அப்துல் மஜித், தஸ்னிமா(33), அவரது குழந்தைகள் ரின்ஷா பாத்திமா(12), ரைஹா பாத்திமா(4), சகோதரி முஹ்சினா(35) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆட்டோவில் இருந்த 2 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார் விரைந்துவந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தந்தையின் அழுகிய உடலுடன் 3 நாட்களாக இருந்த மகன்: துர்நாற்றம் வீசியதால் சந்தேகம்
தந்தையின் அழுகிய உடலுடன் 3 நாட்களாக இருந்த மகன்: துர்நாற்றம் வீசியதால் சந்தேகம்
சாலையின் திருப்பத்தில் பேருந்து வேகமாக திரும்பியதால் தவறுதலாக ஆட்டோ மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது என பார்த்தவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் ஆட்டோ ஒட்டி வந்த மஜித், தனது மகளுக்கு சில நாள்கள் திருமணம் நடைபெற உள்ள நிலையில் உயிரிழந்துள்ளார். மேலும், தஸ்னிமா என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தான் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து சொந்த நாட்டிற்கு வந்துள்ளார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...