உலகம்ஏனையவைசெய்திகள்

காட்டுத்தீ காரணமாக வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான கனேடியர்கள்

Share

காட்டுத்தீ காரணமாக வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான கனேடியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஆறுதலடைந்துள்ளார்கள்.

கனடாவில் காட்டுத்தீயால் கடுமையாக பாதிக்கப்பட்ட Yellowknife பகுதியிலிருந்து, 20,000க்கும் மேலான மக்கள் ஆகத்து மாதத்தின் மத்தியில் வெளியேற்றப்பட்டார்கள்.

இந்நிலையில், தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்ததைத் தொடர்ந்து, வெளியேற்ற உத்தரவு நேற்று மதியம் விலக்கிக்கொள்ளப்பட்டது. எப்போது வீட்டுக்குத் திரும்புவோம் என ஆவலுடன் காத்திருந்தவர்களுக்கு இந்த செய்தி பெரிய ஆறுதலை அளித்துள்ளது.

நகரத்துக்கு வரும் விமானங்கள் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ள நிலையில், ’Welcome Home’ என்னும் பதாகை மீண்டும் தங்கள் வீடுகளுக்கு வரும் மக்களை வரவேற்கும் வகையில் Behchoko பகுதிக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீக்குப் பின் நகரம் சற்று வித்தியாசமாகத்தான் உள்ளது என வீடுகளுக்குத் திரும்பும் மக்களுக்குத் தெரிவிக்கும் நகர மேயரான Rebecca Alty, காட்டுத்தீயிலிருந்து நகரத்தை பாதுகாக்கும் வகையில் பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனாலும், கடைகள், நகர சேவைகள் ஆகியவை மீண்டும் இயங்கத்தொடங்குவதற்கு சற்று தாமதமாகும் என்பதையும் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார் அவர்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...