ஏனையவை

விடுதலை புலிகளின் தலைவரை கொண்டாடும் சிங்கள மக்கள்

Published

on

விடுதலை புலிகளின் தலைவரை கொண்டாடும் சிங்கள மக்கள்

இலங்கையில் இறுதி யுத்தம் இடம்பெற்று 14 ஆண்டுகள் கடந்துள்ள போதும் தென்னிலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரிக்க கூடிய மக்கள் குறைந்தளவேனும் இருப்பதாக இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் அ. நிக்சன் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை அரசியலில் தற்போது விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பில் பரவலாக பேசப்படும் விடயம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இலங்கையில் உள்நாட்டு போர் இடம்பெற்ற காலத்தில் வடக்கு – கிழக்கில் இருந்த பௌத்த ஆலயங்கள் மீது விடுதலை புலிகள் அமைப்பினர் ஒருபோதும் தாக்குதல் மேற்கொள்ளவில்லை. அவற்றை அவர்கள் மதித்தார்கள். பௌத்த சின்னங்களை அவர்கள் பாதுகாத்தார்கள்.

எனினும் தற்போது பௌத்தமதம் தொடர்பான வடக்கு – கிழக்கை அடிப்படையாக வைத்த அரசியலே தென்னிலங்கை முழுதும் இடம்பெறுகிறது.” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version