ஏனையவை

யாழ். மக்களே அவதானம்..! வெப்பநிலை தொடர்பில் அறிவுறுத்தல்

Published

on

யாழ். மக்களே அவதானம்..! வெப்பநிலை தொடர்பில் அறிவுறுத்தல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடும் வெப்பநிலையுடனான காலநிலை காரணமாக பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் மதிய வேளையில் அதிக வெப்பநிலை காணப்படுகின்றது.

குறிப்பாக 11 மணியிலிருந்து 2 மணி வரை யானகாலப்பகுதியில் அதிகமான வெப்பநிலை நிலவுகின்றது.

இந்த வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக மக்களின் உடலில் நீரிழப்பு ஏற்படும். அதனைத் தடுப்பதற்குப் போதியளவு நீராகாரம் அருந்த வேண்டும்.

வயது வந்தவர்கள் சாதாரணமாக 2-3 லீற்றர் நீரை அருந்த வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் அதனை விட அதிகளவு நீரை அருந்த வேண்டும்.

குறிப்பாகச் சிறுவர்கள் 2 – 3 லீற்றர் நீர் அருந்துவது அவசியமாகும். அடுத்ததாக மதிய வேளைகளில் பிரயாணங்களைத் தவிர்ப்பதனால் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கலாம்.

அத்துடன், மதிய நேரங்களில் விளையாட்டுகளில் ஈடுபடும் சிறுவர்கள் தவிர்ப்பது நல்லது. இந்த வெப்பநிலை அதிகரிப்பானது அடுத்த இரண்டு கிழமைகளுக்கு நீடிக்கலாம்.

அதேவேளை, போதியளவு நீர் உள்ள பழ வகைகளை உட்கொள்ள வேண்டும். பழங்கள் போதியளவு உட்கொள்ளம் பொழுது வெப்பத்தினால் ஏற்படும் ஏற்படும் பாதிப்புகள் குறைவாக இருக்கும்.

அதேபோல உடல் வெப்பநிலையைக் குறைப்பதற்காக நீராடுதல் குறிப்பாகக் காலை அல்லது மாலை வேலைகளில் நீராடுவதன் மூலம் உடல் வெப்பநிலையினை குறைக்க முடியும்.

இதனால் வெப்பத்தால் ஏற்படக்கூடிய உடல் பாதிப்புகளையும் தவிர்க்கலாம். வெப்பமுள்ள சூழ்நிலையில் சில வேளைகளில் சுவாசத்தொற்று நோய் ஏற்படலாம்.

ஆகவே பொது இடங்களிற்குச் செல்லும்போது அவதானமாக இருக்க வேண்டும் குறிப்பாக தூசுகள் இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் இவை மிகவும் முக்கியமாகும் என தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version