கருணாநிதி எனக்கு அரசியல் ஆசான்! குஷ்பூ பேச்சால் குழப்பத்தில் பாஜக
ஏனையவை

கருணாநிதி எனக்கு அரசியல் ஆசான்! குஷ்பூ பேச்சால் குழப்பத்தில் பாஜக

Share

கருணாநிதி எனக்கு அரசியல் ஆசான்! குஷ்பூ பேச்சால் குழப்பத்தில் பாஜக

நான் பாஜகவில் இருந்தாலும் கருணாநிதி தான் எனக்கு அரசியல் ஆசான் என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ பேசியது பாஜகவினரிடையே அதிருப்தியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு கருணாநிதி மற்றும் பெரியார் மீது கொண்ட பற்று காரணமாக நடிகை குஷ்பூ தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். பின்பு, சில காரணங்களால் திமுகவில் இருந்து விலகி 2014 ஆம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார்.

இதனையடுத்து அவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அங்கு, அவருக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

இதனிடையே அவர், திமுக மீது பல்வேறு விமர்சனங்களை வைத்து பேசியுள்ளார். அதே போல், திமுகவும் குஷ்புவை கடுமையான விமர்சனம் செய்து வந்தது. தற்போது, ஒட்டு மொத பாஜகவும் திமுகவை விமர்சித்து தான் பேசி வருகின்றன.

திமுக ஒரு ஊழல் கட்சி, குடும்ப கட்சி என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பாஜக வைத்து வருகிறது.

இந்நிலையில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ, “நான் பாஜகவில் இருந்தாலும் கருணாநிதி எனக்கு எப்போதும் அரசியல் ஆசான். அவரை பற்றி பேச வேண்டும் என்றால் நாள் முழுக்க பேசிக் கொண்டிருப்பேன். நான் திமுகவில் இருந்து வந்தவர்.

அதனால், அவரை பற்றி எனக்கு நன்றாக தெரியும்” என்று கூறியுள்ளார். தற்போது, குஷ்பூ பேசிய பேச்சு பாஜகவினர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1 9
ஏனையவை

ஸ்டாலினின் அரசியல் நாடகம்.. கச்சத்தீவு ஒரு சாக்கு.. அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

கரூர் விவகாரத்தில் தனது அரச நிர்வாகத் தோல்வியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப, கச்சத்தீவை மீட்பது பற்றிப் பேசுவதன்...

3 9
ஏனையவை

திரைமறைவில் அரசியல் செய்யும் அநுர! கனவில் வந்து போகும் நாமல், மகிந்த

பொய்யான ஆதாரங்களை உருவாக்கி ராஜபக்சர்களை சிறையில் அடைக்கும் அரசாங்கத்தின் முயற்சி தோல்வி அடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன...

5
ஏனையவை

கரூர் சம்பவம்.. இரவுக்குள் கைது? விஜய்க்கு வந்த சிக்கல்

கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடிகர் விஜய் அரசியல் பிரச்சாரத்திற்காக நாமக்கல் மற்றும் கரூருக்கு சென்று...

6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...