முதல் முறையாக சென்சேஷன் நடிகையுடன் ஜோடியாகும் சிவகார்த்திகேயன்.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்
ஏனையவை

முதல் முறையாக சென்சேஷன் நடிகையுடன் ஜோடியாகும் சிவகார்த்திகேயன்.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

Share

முதல் முறையாக சென்சேஷன் நடிகையுடன் ஜோடியாகும் சிவகார்த்திகேயன்.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாவீரன் திரைப்படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் எஸ் கே 21 படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து முதல் முறையாக சாய் பல்லவி நடிக்க கமலின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

எஸ் கே 21 படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ் கே 22 படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.

ஆனால், இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கப்போகும் சென்சேஷன் நடிகை குறித்து சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டு வெளிவந்த சீதா ராமம் படத்தின் மூலம் சென்சேஷன் நடிகையாக மாறியுள்ள மிருனாள் தாகூர் தான் எஸ் கே 22 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

எஸ் கே 21 மற்றும் 22 என தொடர்ந்து சிவகார்த்திகேயன் படங்களின் அப்டேட் வெளியாகி கொண்டிருக்க எஸ் கே 14 என துவங்கப்பட்ட அயலான் இந்த ஆண்டிற்குள் வெளியாகவுள்ளது. விரைவில் அயலான் டீசர் வெளியாகவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...