பிரித்தானியா
உலகம்ஏனையவைசெய்திகள்

பிரித்தானியாவில் 7 வயது சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்: 14 வயது சிறுவன் கைது

Share

பிரித்தானியாவில் 7 வயது சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்: 14 வயது சிறுவன் கைது

பிரித்தானியாவில் 7 வயது சிறுமி விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததை தொடர்ந்து 14 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவின் வெஸ்ட் மிட்லாண்ட் பகுதியில் உள்ள வால்சால்(Walsall) சாலையில் 14 வயது சிறுவன் ஒருவர் 7 வயது சிறுமி மீது தன்னுடைய மோட்டார் பைக்-ஆல் மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார்.

இதில்  7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு இரவு 7 மணியளவில் விரைந்து சென்ற பொலிஸார் நிலைமையை ஆராய்ந்தனர்.

அத்துடன் விபத்து ஏற்படுத்திய 14 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விபத்து நடந்த மாதிரியை உருவாக்கும் முயற்சியில் சிறுவன் ஓட்டிச் சென்ற நீலம் மற்றும் கருப்பு நிறம் கொண்ட மோட்டார் பைக்கை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு துப்பறிவாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வெஸ்ட் மிட்லாண்ட் பொலிஸ் அதிகாரி DS பால் ஹியூஸ் பேசிய போது, இது மிகவும் மோசமான நிகழ்வு இதன் விளைவாக அப்பாவி குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

ஆனால் நாங்கள் இன்னும் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை தேடிக் கொண்டு இருக்கிறோம், எனக்கு தெரியும் இங்குள்ள உள்ளூர் மக்களுக்கு அந்த மோட்டார் சைக்கிள் எங்கு இருக்கும் என்று, எனக்கு தேவை எல்லாம் உள்ளூர் சமூகம் விசாரணைக்கு உதவ வேண்டும் என்பது தான்.

இது மக்களை பாதுகாப்பது பற்றியது அல்ல, சரியானவற்றை செய்வது பற்றியது என்று விசாரணை அதிகாரி பால் ஹியூஸ் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...