இந்தியன் 2 படத்தின் Digital Rights மட்டுமே இத்தனை கோடியா?
2001 -ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.
இதில் கமலுடன் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், எஸ்.ஜே.சூர்யா சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துவருகின்றனர்.
லைக்கா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் தயாராகி வரும் இந்தப் படத்துக்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் Digital Rights குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதில் பிரபல ott தளம் நெட்பிளிக்ஸ் இப்படத்தின் அனைத்து மொழி Digital Rights ரூபாய் 210 கோடிக்கு வாங்கியுள்ளதாக சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.