ஏனையவை

கிரகணம் முடிந்த பின்பு பரிகாரம் செய்ய வேண்டிய ராசி, நட்சத்திரங்கள்

Published

on

அஸ்வினி, பரணி, கிருத்திகை, பூரம், பூராடம், இந்த நட்சத்திரக்காரர்கள்  கிரகணம் முடிந்தவுடன் தலைக்கு குளித்துவிட்டு வீட்டை முழுவதும் சுத்தம் செய்துவிட்டு, உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று ராகு பகவானுக்கு உங்கள் பெயரை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். சந்திர பகவானுக்கும் உங்களுடைய பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.

நவகிரகங்களில் உள்ள ராகு சந்திரன் இருவருக்கும் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு வெள்ளை நிற வஸ்திரம், நெல், வெற்றிலை பாக்கு வைத்து யாருக்கேனும் தானம் கொடுக்க வேண்டும். அந்த கோவிலில் இருக்கும் அர்ச்சகருக்கு கூட இந்த தானத்தை செய்யலாம். இதை சந்திர ப்ரீத்தி பரிகாரம் என்று சொல்லுவார்கள்.

கிரகண நேரத்தின் போது கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்: மேஷ ராசியில் உள்ள பெண்கள் கிரகண நேரத்தில் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். அதிகமாக வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். அதே சமயம் கிரகண நேரத்தின் போது உங்களுடைய மனதிற்குள் ஏதாவது உங்களுக்கு பிடித்த தெய்வத்தின் நாமத்தை ஜெபமாக சொல்லுங்கள்.

சிம்ம ராசிக்காரர்கள், தனுசு ராசிக்காரர்கள், மீன ராசிக்காரர்கள், விருச்சிக ராசிக்காரர்கள், கவனமாக இருக்க வேண்டும். வெளியில் செல்ல கூடாத ராசி: குறிப்பாக மகர ராசிக்காரர்கள் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருங்க. கூடுமானவரை வெளியிடங்களுக்கு பிரயாணம் செய்யாமல் இருப்பது நல்லது.

அப்படியே உங்களுக்கு வெளியில் பிரயாணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ராமஜபம் சொல்லலாம். அப்படி இல்லை என்றால் நாராயணனின் பேரை உச்சரிக்கலாம். அல்லது ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள்.

கிரகண நேரத்தின்போது கூடுமானவரை குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்பாதீர்கள். வெளியிடங்களில் பெரியவர்கள் இருப்பதை கூட தவிர்ப்பது நல்லது. கிரகண நேரத்தில் எந்த பிரச்சனையிலும் போய் சிக்கிக் கொள்ளாமல் இருக்க அனைவருமே அவரவர் வீட்டில் இருந்தபடி அவரவருக்கு பிடித்த தெய்வத்தின் நாமத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருப்பதன் மூலம் வரக்கூடிய பிரச்சனைகளின் பாதிப்பு குறையும்.

#Anmigam

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version