வீட்டில் தொல்லை செய்யும் பூச்சிகளை விரட்ட, இயற்கையான எளிய வழிகள் உண்டு. இதற்காக பணத்தை செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
ஒரு சில வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை வைத்தே சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.
- நான்கைந்து பூண்டு விழுதுகளை எடுத்து நசுக்கி, சுடுநீரில் இட்டு காய்ச்சி, அந்த நீரை உங்கள் வீடு முழுக்க தெளித்தாலே போதும், கொசு தொல்லை உங்கள் வீட்டில் இருக்காது. பூண்டின் வாசம் நன்கு இருக்க வேண்டும் என்பது முக்கியமானது.
- எறும்பு எல்லா காலத்திலும் வீட்டை சுற்றி இருக்கும். நீங்கள் அடுத்த முறை உங்கள் வீட்டில் எறும்பை கண்டால் செய்ய வேண்டியது, வெள்ளை வினிகரை எறும்புகள் இருக்கும் இடத்தில தெளித்தல். இது எறும்புகளை தடுக்கும் ஓர் சிறந்த இயற்கை பொருள் ஆகும்.
- கோதுமை மாவுடன், கொஞ்சம் போரிக் பவுடரும், சிறிதளவு நீரும் சேர்த்து கலந்து உருண்டை பிடித்து கரப்பான்பூச்சி இருக்கும் இடத்தில வைத்துவிட்டால், கரப்பான் பூச்சி தொல்லை முழுமையாக அழிந்துவிடும்.
- எலுமிச்சை, சாத்துக்கொடி, ஆரஞ்சு போன்றவற்றின் தோல்களை சிலந்தி இருக்கும் இடத்தில தேய்த்தாலே, சிலந்தி வராது, முற்றிலுமாக அழிந்துவிடும்.
- வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஓர் கிண்ணத்தில் கர்பூரங்களை போட்டு வைத்துவிட்டால், ஈக்களின் தொல்லையே இருக்காது.
#Hometips
Leave a comment