AnuraKumaraDissanayake
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை : 21 அமைச்சர்கள் பதவியேற்பு

Share

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை : 21 அமைச்சர்கள் பதவியேற்பு

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் பதவிப்பிரமாண நிகழ்வு தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

குறித்த நிகழ்வானது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake ) முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் காலை 10 மணிக்கு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு ஆரம்பமானது.

அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சராக சமகால ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றுள்ளார்.

கல்வி, தொழிற்கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சராக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) பதவியேற்றுள்ளார்.

வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சராக விஜித ஹேரத் (Vijitha Herath) பதவியேற்றுள்ளார்.

பொது நிர்வாக, மாகாண சபை , உள்ளூராட்சி அமைச்சராக சந்தன அபேரத்ன மற்றும் நீதி மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சராக ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பதவியேற்றுள்ளார்.

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சராக லால் காந்த பதவியேற்றுள்ளார்.

நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சராக அநுர கருணாதிலக பதவியேற்றுள்ளார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகர் பதவியேற்றுள்ளார்.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சராக உபாலி பன்னிலகே பதவியேற்றுள்ளார்.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராக சுனில் ஹந்துநெத்தி பதவியேற்றுள்ளார்.

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சராக ஆனந்த விஜயபால பதவியேற்றுள்ளார்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறைமுகம் சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக பிமல் ரத்நாயக்க பதவியேற்றுள்ளார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக ஹினிதும சுனில் செனவி பதவியேற்றுள்ளார்.

சுகாதாரம், வெகுசன ஊடக அமைச்சராக நலிந்த ஜயதிஸ்ஸ பதவியேற்றுள்ளார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக சமந்த வித்யாரத்ன பதவியேற்றுள்ளார்.

விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சராக சுனில் குமார கமகே பதவியேற்றுள்ளார்.

வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக வசந்த சமரசிங்க பதவியேற்றுள்ளார்.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக கிருஷாந்த சில்வா அபேசேன பதவியேற்றுள்ளார்.

அனில் ஜயந்த பெர்னாண்டோ – தொழில் , குமார ஜயகொடி – வலுசக்தி மற்றும் தம்மிக்க பட்டபெந்தி – சுற்றாடல் அமைச்சராக பதவியேற்றுள்ளனர்.

 

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...