ஏனையவை

நாடாளுமன்றில் முதல்நாளே சர்ச்சையில் சிக்கிய வைத்தியர் அர்ச்சுனா

Share
16 21
Share

நாடாளுமன்றில் முதல்நாளே சர்ச்சையில் சிக்கிய வைத்தியர் அர்ச்சுனா

யாழ்.(Jaffna)மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்(Dr.Archuna) புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு இன்றையதினம்(21) ஆரம்பமானபோது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்ததுடன் அந்த கதிரையிலிருந்து நகர மறுத்தமை பேசுபொருளாக மாறியுள்ளது.

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றுக்கான கன்னி அமர்வு இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதன்போது முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரான வைத்தியர் அரச்சுனா எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

உடனடியாகவே நாடாளுமன்ற ஊழியர்கள் இது எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனம் எனவே அந்த இடத்திலிருந்து நகருமாறு தெரிவித்தபோதும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றின் முதல்நாள் அமர்வில் ஆசனங்கள் எவருக்கும் ஒதுக்கப்படவில்லை என வைத்தியர் அர்ச்சுனா நாடாளுன்ற ஊழியருக்கு பதிலளித்தார்.

“இங்கு வேறு ஆசனத்தில் அமர வேண்டுமென எங்காவது எழுதி உள்ளதா, எதிர்க்கட்சித் தலைவருக்கு வேண்டுமெனில் அவரைச் சென்று எங்காவது அமரச் சொல்லுங்கள். நான் இங்குதான் இருப்பேன்” என்றார்.

பின்னர், தான் எந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்கினாலும், சஜித் பிரேமதாசவுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவருக்கான ஆசனத்தை அறிவிக்குமாறு கோரிய அவர், அந்த ஆசனத்திலிருந்து நகர மறுத்ததுடன் நாங்கள் நாடாளுமன்ற மரபை மாற்றவே இங்கு வந்துள்ளோம் என தெரிவித்தார்.

இதேவேளை பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவரின் ஆசனங்களை தவிர மற்றைய ஆசனங்களில் அமரவே இன்றையதினம் விதிவிலக்களிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
Related Articles
27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...

3 2
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகில் மிகவும் வயதானவர் 116 வயதில் காலமானார்

உலகின் மிக வயதானவராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேசிலிய கன்னியாஸ்திரி சகோதரி இனா கனபரோ லூகாஸ்(Inah Canabarro Lucas),...