தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையேயான எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போர்நிறுத்த ஒப்பந்தம் (Ceasefire Agreement), மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கையெழுத்தானது.
தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டின் (ASEAN Summit) ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
போர்நிறுத்த ஒப்பந்தத்துடன், ட்ரம்ப் தாய்லாந்துடன் ஒரு முக்கியமான கனிம ஒப்பந்தத்திலும், கம்போடியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

