ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்கு சதமடித்த சாருஜன் சண்முகநாதன்
Cricket,
Sri Lanka,
Afghanistan,
Sharujan Shanmuganathan Century 19Asia Sl Vs Afg
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி வீரரான சாருஜன் சண்முகநாதன்(Sharujan Shanmuganathan) சதமடித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான போட்டி சார்ஜாவில் (Sharjah) இன்று (01) நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகப்பட்சமாக சாருஜன் சண்முகநாதன் 102 ஒட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ஏஎம் கசன்பர்(AM Ghazanfar) 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 244 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.