மம்மூட்டி நடிக்கவிருந்த படத்தில் நடித்த கமல் ஹாசன்.. அது என்ன படம் தெரியுமா?

24 666bff9c66d47

மம்மூட்டி நடிக்கவிருந்த படத்தில் நடித்த கமல் ஹாசன்.. அது என்ன படம் தெரியுமா?

நடிப்பு இயக்கம் நடனம் பாடகர் என்ப பல பன்முகங்களை கொண்டவர் தான் உலக நாயகன் கமல் ஹாசன்.

கடந்த 1989ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சாணக்கியன் மிக பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் கமலுடன் இணைந்து, ஜெயராம், ஊர்மிளா, திலகன் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் மலையாளத்தில் மட்டுமே வந்தது.

இப்படம் குறித்து சுவாரசியமான தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, சாணக்கியன் படத்தில் கமல் நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்தது நடிகர் மம்மூட்டி தானாம்.

மம்மூட்டியின் கால்ஷீட் கிடைக்காததால் தான் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கமலுக்குக் கிடைத்தது என்று நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version