நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் ட்ரைலர் இதோ..
Venkat Prabhu
ஐஸ்வர்யா. எம் மற்றும் சுதா. ஆர் தயாரிப்பில் வெங்கட் பிரபு வழங்கும் திரைப்படம் நண்பன் ஒருவன் வந்த பிறகு. இப்படத்தை ஆனந்த் என்பவர் இயக்கி நடித்துள்ளார்.
விடுதலை படத்தின் மூலம் ஹீரோயினாக அசத்திய நடிகை பவானி ஸ்ரீ இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் youtuber இர்பான், மிர்ச்சி விஜய், KPY பாலா, ஆர்.ஜே. ஆனந்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இளைஞர்கள் பட்டாளம் சூழ கலகலப்புக்கு பஞ்சமில்லாத நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.