சிறிலங்கா எயார்லைன்ஸ் தொடர்பில் ஜனாதிபதி அநுர எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

சிறிலங்கா எயார்லைன்ஸ் தொடர்பில் ஜனாதிபதி அநுர எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

Sri Lankan Airlines Brought Under Govt Control

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் வர்த்தமானியாக வெளியிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் கடமைகள் மற்றும் செயற்பாடுகளை விவரிக்கும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கன் விமான சேவையை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், சிறிலங்கன் விமான சேவையை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட்டு, அதிக இலாபகரமான எதிர்காலத்திற்காக அதனை மறுசீரமைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பணிப்புரை வழங்கினார்.

அனைத்து இலங்கையர்களும் பெருமைகொள்ளும் நிறுவனமாக இருக்க வேண்டும் என்றும் அது இலங்கையர்களுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவுறுத்தியதாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் தவிசாளர் சரத் கனேகொட தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக நஷ்டத்தைக் குவித்து வரும் விமான நிறுவனத்தை ஒரு பகுதியை விற்பனை செய்வதற்கும் நிர்வகிப்பதற்கும் முன்னாள் ஆட்சியின் திட்டங்களை அரசாங்கம் தற்போது துக்கியெறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version