ஒரு ஆய்வின்போது ஒரு நாளைக்கு இரண்டு கப் பிளாக் டீ அருந்துபவர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவு என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு நாளைக்கு மூன்று கப் பிளாக் டீ பருகுவதால் இறப்பு அபாயம் 12 சதவீதம் குறைந்துள்ளது. பிளாக் டீ பருகுவது, நீரிழிவு, பக்கவாதம் மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
இந்த பானத்தில் பைட்டோநியூட்ரியன்கள், பாலிபினால்கள், கேட்டசின்கள் மற்றும் ஆன்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. அவை அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளன.
ஒரு கப் பிளாக் டீயில் 2.4 கலோரிகள் மற்றும் சிறிய அளவு கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதங்கள் மற்றும் கொழுப்புகள் உள்ளன.
எனவே பிளாக் டீ குடிப்பது சிறந்தாக கருதப்படுகின்றது.
#Healthtips
Leave a comment