மருத்துவம்

உடல் உபாதைகளுக்கு தீர்வு வேண்டுமா? சில வீட்டு வைத்தியம்

Share
74797821
Share

உடல் உபாதைகளுக்கு தீர்வு தரும் சில எளிய வீட்டு வைத்தியக்குறிப்புக்களை இங்கே பார்ப்போம்.

  • உடல் பருமன் குறைய வெள்ளை பூசணிக்காயை எடுத்து ஜூஸ் பிழிந்து காலையில் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும். நெஞ்சு எரிச்சல் வராமல் இருக்கும்.
  • செம்பருத்தி பூக்கள் மூன்றை எடுத்து அவற்றின் இதழ்களை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு எடுத்து பிழிந்து வடிகட்டி, கொஞ்சம் பால் சேர்த்து சாப்பிட்டால் ரத்தஅழுத்தம் குறையும்.
  • பித்தம் தலைசுற்றல் சரியாக ஒருபிடி கொத்தமல்லி தழையை அரைத்து சாறு எடுக்கவும். அதில் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட, தலைசுற்றல் போகும்.
  • ஒரு கோப்பை நல்லெண்ணெயில் 7, 8 பூண்டை நசுக்கிப் போடவும். அதை நன்றாக காய்ச்சவும். இறக்கி வைத்து ஒரு மூடி அளவு எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து எடுத்துச் சேர்த்து வைக்கவும். இதை தலையில் பூச்சிவெட்டு இருக்கும் இடத்தில் இரண்டு சொட்டு தேய்த்து வர, முடி வளர ஆரம்பிக்கும்.
  • சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்க நாவல் கொட்டை பொடி, வெந்தயப்பொடி, கடுக்காய் தோல் ஆகியவற்றில் சமபாகம் எடுத்துக் கலந்து வைக்கவும். கொதிக்கும் தண்ணீரில் இதை ஒரு ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து காலையில் கால் தம்ளர் குடிக்கவும்.
  • இதையும் படியுங்கள்: நகம், கடிப்பதற்காக அல்ல
    வறட்டு இருமல், சூடு குறைய அதிமதுரம் பொடியை வாங்கி, ஒரு தம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் பொடி போட்டு கொதிக்க வைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடவும்.
  • வாயு, வயிற்றுவலி நீங்க ஒரு ஸ்பூன் சீரகத்தை வெறும் வாணலியில் நன்றாக வறுத்து ஒரு தம்ளர் தண்ணீர் விடவும். நன்றாக கொதித்ததும் பனைவெல்லம் சேர்த்து குடிக்கவும்.
  • கர்ப்பப்பையில் நோய் வராமல் தடுக்க துளசி, வில்வம், அருகம்புல், மிளகு உள்ளிட்டவை நாட்டு மருந்துக்கடைகளில் பொடியாகவே கிடைக்கும். இவற்றை வாங்கிக் கலந்து வைத்துக்கொண்டு வாரத்துக்கு ஒரு நாள் ஒரு ஸ்பூன் பொடியை வெந்நீரில் கலந்து சாப்பிடவும்.
  • தினம் குடிக்கும் தண்ணீரில் எலுமிச்சம்பழத்தை பாதியாக வெட்டி போடவும். மறுநாள் காலை வரை இந்த தண்ணீரைக் குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

#Healthtips

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
35 1
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்குமருத்துவம்

துளசி இலையில் இத்தனை மருத்துவ குணங்களா?

துளசி இலையில் இத்தனை மருத்துவ குணங்களா? மூலிகையின் அரசி என்று அறியப்படும் துளசி செடியில் பல்வேறு...

tamilni 261 scaled
மருத்துவம்

உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு பயனா?

உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு பயனா? நாம் உணவு சமைக்கும் போது பலசுவைக்காக உணவுப் பொருட்களை...

tamilni 613 scaled
பொழுதுபோக்குமருத்துவம்

பனங்கிழங்கால் இத்தனை நன்மைகளா..!

பனங்கிழங்கால் இத்தனை நன்மைகளா..! நமது தாயகப் பிரதேசத்தில் தற்போது பனங்கிழங்கு சீசன் ஆரம்பமாகி மும்முமாக விற்பனை...

download 3 1 14
மருத்துவம்

நீரிழிவு நோயாளிகள் கால் வீக்கத்தை தவிர்க்க பின்பற்றவேண்டியவை!

உடலுக்கு தேவையான இன்சுலின் சுரக்காமல் இருப்பதும், சுரக்கும் இன்சுலினை உபயோகிக்காமல் இருப்பதும் தான் என்பது நீரிழிவு...