வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்!

download 16 1 4

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்!

நீரிழிவு நோயாளிகள் வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் சர்க்கரை அளவு குறையும் என்பது உண்மைதான். வெந்தயத்தில் உள்ள கேலக்ட்டோமேனான் என்ற நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உறிஞ்சுதலை வயிற்றில் குறைத்து, குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தடுக்கிறது.

மேலும் வெந்தயத்தில் உள்ள ஹைட்ராக்சி லியூஸின் என்ற வேதிப்பொருள் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து இன்சுலின் சுரப்பதை மேம்படுத்தி, ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. இது 2015-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டது.

வெந்தயத்தில் உள்ள ட்ரைகோணலின் என்ற வேதிப்பொருள் இன்சுலின் திறம்பட செயல்பட உதவுகிறது. வெந்தயத்தை மென்று சாப்பிட்டால் அல்லது 10 கிராம் வெந்தயத்தை ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலை குடித்தால் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

வெந்தயத்தில் உள்ள சப்போனின் என்ற ஒரு வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வெந்தயத்தை கர்ப்பிணி பெண்கள் தவிர்ப்பது நல்லது.

ஏனெனில் வெந்தயம் கர்ப்பப்பையில் சுருக்குதல் உண்டாக்கி கருச்சிதைவு ஏற்படலாம். மேலும் வார்பெரின் போன்ற மருந்துகளுடன் வெந்தயம் எதிர் செயல் புரிவதால் இம்மருந்துகளை உட்கொள்பவர்கள் வெந்தயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

#helthy

Exit mobile version