அனைவரது வீடுகளிலும் எளிமையான முறையில் கிடைக்கும் ஒரு மருத்துவ பொருள் தான் கருவேப்பிலை.
கறிவேப்பிலையில் கல்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்போரோஸ் போன்ற கனிமச்சத்துக்களும் மற்றும் வைட்டமின் எ, பி, சி, இ போன்ற விட்டமின்களும் நிறைந்துள்ளது.
இதில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. இதனை தினமும் 10 எடுத்து கொள்வது நன்மையே தரும். தற்போது அவற்றை பார்ப்போம்.
- தினமும் 10 கறிவேப்பிலை இலையினை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உங்களின் உடல் பருமன் கணிசமாக குறையும்.
- கறிவேப்பிலைக்கு உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினை கரைக்கும் சக்தி உண்டு. இதில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது.
- கறிவேப்பிலையில் அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் தினமும் 10 கறிவேப்பிலையினை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்க முடியும்.
- கறிவேப்பிலையில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் கறிவேப்பிலை உடலுக்கு நன்மை விளைவிக்கிறது. இனி உடல் பருமனுடன் இருப்பவர்கள் கவலை பட வேண்டாம்.
#CurryLeaves #HealthTips
Leave a comment