உடல் எடையை குறைக்க உதவுகிறதா பிளாக் காபி ?

raimond klavins uAk731NvaJo unsplash 1920x1024 1

பிளாக் காபி அதிகமான சுவையை தருவது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.

குறிப்பாக உடல் எடையை குறைக்க உதவுவதாக சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது அது எப்படி என்பதை பார்ப்போம்.

உடல் எடையை குறைக்க எப்படி உதவுகின்றது?

பிளாக் காபி வளர்சிதை மாற்ற செயல்முறைகளை வேகப்படுத்தி, பசி எடுக்கும் தன்மையை கட்டுப்படுத்துகிறது. இது பெப்டைட் ஒய் எனப்படும் பசி ஹார்மோனிற்கு எதிராக செயல்பட்டு பசியை கட்டுப்படுத்துகிறது.

கருப்பு காபியில் இருக்கும் கஃபைன் உடல் ஆற்றலை ஊக்குவித்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
உடலில் இருக்கும் அதிக கலோரிகளை எரித்து உடலை சுறுசுறுப்பாக மாற்றுகிறது. அதுமட்டுமல்லாமல் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துகிறது. இது கலோரி இல்லா பானம் என்றும் அழைக்கப்படுகிறது
கருப்பு காபி குளோரோஜெனிக் அமிலத்தைக் கொண்டுள்ளது. இது எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. உடலில் குளுக்கோஸ் உற்பத்தியைக் குறைக்கிறது.
தினமும் கருப்பு காபி குடிப்பது எடை குறைப்பிற்கு உதவும். உடற்பயிற்சிக்கு முன் கருப்பு காபியை குடிப்பது உடலில் இருக்கும் அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது.

#HEALTH THIPS

Exit mobile version