dates
மருத்துவம்

பேரீச்சம்பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மை என்ன தெரியுமா?

Share

பேரீச்சம்பழத்தில் காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது.

அதை வெறுமனே சாப்பிடுவதைக் காட்டிலும் பாலில் ஊற வைத்து சாப்பிட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம்.

பாலுடன், பேரீச்சம் பழத்தை .சேர்த்து உட்கொண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

  • பாலில் ஊறவைத்த பேரிச்சம் பழத்தை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொண்டால் அது கருவில் உள்ள குழந்தைக்கு உறுதியான எலும்புகள் மற்றும் அதிக அளவிலான ரத்தத்தை உருவாக்க வலி வகை செய்யும்.
  • பாலில் ஊற வைத்த பேரிச்சையுடன் தேன் கலந்து, அதனை அரைத்து பேஸ்ட் போல் தயாரித்துக் கொள்ளவும். அந்த பேஸ்டை முகத்தில் பேக் போல இட்டுக் கொண்டு பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை அப்படியே விடவும். வாரத்திற்கு ஒரு முறை இந்த பேஸ்பேக் செய்து போட்டுக் கொண்டால் முக சுருக்கம் நீங்கி இளமையாக  காட்சியளிப்பீர்கள்.
  • பாலில் ஊற வைத்த பேரிச்சை ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் அடர்த்தியான உணவாக செயல்பட்டு உங்களின் ஆற்றல் அளவை அதிகரிக்கும். பேரிட்சையை பாலில் மட்டும் ஊற வைப்பது ஏன்? பேரிட்சம் பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
  • பேரிச்சம்பழம் ஊற வைத்த பாலில் கொஞ்சம் தேனும் கலந்து வெது வெதுப்பான பாலை குடிக்கும் போது நீடித்த இருமலை போக்க முடியும்.
  •  பாலில் சில பேரிச்சைகளை போட்டு கொதிக்க வைத்து சூடாக குடித்தால் தொண்டைக்கும் இதமாக இருக்கும்.
  • பேரிச்சம்பழம் வேக வைத்த பாலை குடித்து வந்தால் எலும்புகள் வலுவாக இருக்கும். குறிப்பாக எலும்பு தேய்மானத்தை தடுக்கும். சோம்பேறித் தனத்தை நீக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
35 1
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்குமருத்துவம்

துளசி இலையில் இத்தனை மருத்துவ குணங்களா?

துளசி இலையில் இத்தனை மருத்துவ குணங்களா? மூலிகையின் அரசி என்று அறியப்படும் துளசி செடியில் பல்வேறு...

tamilni 261 scaled
மருத்துவம்

உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு பயனா?

உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு பயனா? நாம் உணவு சமைக்கும் போது பலசுவைக்காக உணவுப் பொருட்களை...

tamilni 613 scaled
பொழுதுபோக்குமருத்துவம்

பனங்கிழங்கால் இத்தனை நன்மைகளா..!

பனங்கிழங்கால் இத்தனை நன்மைகளா..! நமது தாயகப் பிரதேசத்தில் தற்போது பனங்கிழங்கு சீசன் ஆரம்பமாகி மும்முமாக விற்பனை...

download 3 1 14
மருத்துவம்

நீரிழிவு நோயாளிகள் கால் வீக்கத்தை தவிர்க்க பின்பற்றவேண்டியவை!

உடலுக்கு தேவையான இன்சுலின் சுரக்காமல் இருப்பதும், சுரக்கும் இன்சுலினை உபயோகிக்காமல் இருப்பதும் தான் என்பது நீரிழிவு...