உடல் சூட்டை தணிக்கும் கோரைப் பாய்!
கோடை காலம் தொடங்கி விட்டாலேஅதனுடன் இணைந்த நோய்களும் உடலுடன் ஒட்டிக்கொள்கின்றன.மழையைகூட தாங்கிக் கொள்ளலாம், ஆனால் வெயிலை ஏற்பது என்பது இயலாதது. அவ்வாறான காலங்களில் வசதி படைத்தவர்கள் கோடைவாச ஸ்தலங்களை நாடிச்செல்வார்கள்.
ஆனால் நடுத்தர மற்றும் ஏழை, எளியோர் உணவு முறை மாற்றத்தின் மூலம் தான் இந்த கோடையை கடக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பூமியின் தட்ப வெப்பநிலை மாற்றங்களால் உடல் நிலை பல்வேறுவகையில் பாதிக்கப்படுகிறது. மேலும் மனிதனின் தற்போதைய நவீன வாழ்க்கை முறை, நவீன உணவு முறை மாற்றங்களும் உடல் பாதிப்படையவும், உடற்சூடுஏற்படவும்காரணமாகின்றன.
இலவம் பஞ்சு மெத்தை, தலையணை, கோரைப்பாய் பயன்படுத்திய காலம் மாறி, இன்றுசெயற்கைபோம் மெத்தை, தலையணைகளை பயன்படுத்த தொடங்கிவிட்டோம்.
வெயில் காலம் மட்டுமல்ல எல்லா காலத்திலும் படுத்து உறங்க, உட்கார சிறந்தது இலவம் பஞ்சால் செய்த இருக்கை, மெத்தை, தலையனைதான் சிறந்தது. இலவம்பஞ்சு மெத்தை உடல் சூட்டை தணித்து, உடல் சூட்டை சமச்சீராக்கி உடல் முழுவதையும் குளிர்ச்சி அடையச் செய்யும்.
கொதிக்கும் கோடை வெயில் காலங்களில் போம் வகை செயற்கை மெத்தை, தலையனைகளைப் பயன்படுத்தும் போது தோலில் எரிச்சல், கட்டி, கொப்புளங்கள், கண் எரிச்சல், மலக்கட்டு, மூலம், பவுத்திரம், பிறப்புறுப்பு பாதிப்பு, விந்தணுக்கள்அழிவு, சினைப்பைநீர்க்கட்டி, வெள்ளைப்படுதல், ஞாபக மறதி, உடல் வலி, அசதி போன்றவை வருவதற்கான காரணங்கள் அதிகம்.
இதைத் தெரிந்து தான் நம் முன்னோர்கள் செயற்கை மெத்தை, தலையணைகளைத் தவிர்த்து இயற்கையில் கிடைக்கும் இலவம் பஞ்சு மெத்தை, தலையணையை பயன்படுத்தி, அதிக உஷ்ணத்தால் ஏற்படும் நோய்கள் வராமல் தற்காத்து வாழ்ந்தனர்.
காற்றின்இசைக்கேற்ப ஆற்றங்கரையோரம் நடனமாடும் கோரை புற்களைச் சேகரித்து, பதப்படுத்தி, கற்றாழை நாரினால் கோர்த்து சேர்த்த கோரைப்புல் பாய்களின் பயன்பாடு அதிகமாக இருந்த காலத்தில் படுக்கை விரிப்புகளால் உண்டாகும் நோய்கள் மிகக்குறைவாகவே இருந்தது.
இப்போது ஆதிக்கம் செலுத்தி வரும் நெகிழிப் பாய்களை குளிர்காலத்தில் பயன்படுத்தலாம் என்றாலும், அவற்றில் உடலுக்கு நன்மை பயக்கும் எவ்வித மருத்துவ குணங்களும் இல்லை என்பதுதான் உண்மை.
வெயில் காலத்தில் நெகிழிப் பாய்களில் உறங்கினால், நம் உடலும் சூடாகி தோலும் நெகிழும் அளவுக்கு அவை கொதிக்கின்றன. மேலும் உடல் நோய்களையும் ஏற்படுத்துகின்றது.
தமிழ் மக்கள் பாரம்பரியமிக்க கோரைப் பாயை படுக்கைவிரிப்புகளாக பயன்படுத்துவது மட்டுமின்றி மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது என்பதை அறிந்துதான் இதைப் பயன்படுத்தி பயனடைந்தனர்.
#Helthy