பொதுவாக பூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது.
சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.
இதனை பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு நன்மையை தருகின்றது.
அந்தவகையில் பூண்டை பச்சையாக உண்ணுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
- காலையில் வெறும் வயிற்றில் பூண்டுவை உண்பதே சிறந்தது, வெறும் வயிற்றில் உண்டால் தான் அதன் முழு சத்துகளையும் உடல் ஏற்று கொள்ளும்.
- வயிற்றில் புண் உள்ளவர்கள் வெறும் பூண்டை உண்பதை தவிர்க்கவும். பூண்டுடன் தேன் சேர்த்தோ அல்லது, பூண்டை நெருப்பில் சுட்டோ உண்ணலாம்.
- தினமும் பூண்டை பச்சையாக உண்பதால் இதயம் பலம் பெறுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. எனவே இதயம் பலவீனமானவர்கள், இதய நோய் உள்ளவர்கள் கட்டாயம் பூண்டை உண்பது நல்லது.
- நிமோனியா, காச நோய், நெஞ்சு சளி, ஆஸ்துமா போன்ற அனைத்து விதமான சுவாச பிரச்சனைகளுக்கும் பூண்டு ஒரு சிறந்த மருந்தாகும்.
- வெறும் பூண்டு சாப்பிட முடியாதவர்கள் பூண்டுடன் தேன் சேர்த்தோ அல்லது சமைத்தோ உண்ணலாம்.
#LifeStyle