மருத்துவம்

பச்சை முட்டை எடுத்து கொள்வது நல்லதா?

Published

on

பச்சை முட்டையில் இருக்கும் திரவம் உடலுக்கு பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. அதனால் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

அந்தவகையில் தற்போது பச்சை முட்டை எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை பார்ப்போம்.

  • முட்டையை அப்படியே உடைத்து சாப்பிட்டால் அதிலிருக்கும் வெள்ளைக்கரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். சருமம் சிவத்தல், அரிப்பு, வீக்கம், வயிற்று போக்கு, கண்களில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
  • வெள்ளை நிற திரவத்தை சாப்பிடுவது சிலருக்கு பயோட்டின் குறைபாட்டை ஏற்படுத்தும். பயோட்டின் குறைபாடு வைட்டமின் பி 7, வைட்டமின் எச் என்றும் அழைக்கப்படுகிறது.
  • முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள அல்புமினை உட்கொள்ளும்போது உடல் பயோட்டினை உறிஞ்சுவதற்கு காரணமாகிறது. இதன் காரணமாக தோல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
  • முட்டையின் வெள்ளைக்கருவில் புரதம் அதிகமாக இருக்கும். இது சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
  • கோழிகளின் குடல் பகுதியில் சால்மோனெல்லா எனப்படும் பாக்டீரியா காணப்படும். அது முட்டை ஓட்டின் உள்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் பரவி இருக்கும். சால்மோனெல்லாவை நீக்க அதிக வெப்பநிலையில் முட்டையை வேக வைக்கவேண்டும். அதை விடுத்து முட்டையை அப்படியே குடித்தால் பாக்டீரியாக்களால் பாதிப்பு நேரும்.

#Egg #Healthtips

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version