மருத்துவம்
ஒருவரை நாய் கடித்து விட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும்? அவசியம் தெரிஞ்சிகோங்க
ஒருவரை நாய் கடித்தால் மருத்துவமனைக்குச் செல்லும் முன் உடனடியாகச் செய்ய வேண்டிய முதலுதவி என்னென்ன என்பதை தெரிந்துகொள்வோம்.
- நாய் கடித்த காயமோ அதன் தடமோ உள்ள இடத்தில், விரல்களால் வைத்து மெல்ல அழுத்துங்கள்.
- கடிபட்ட இடத்தில் குழாய் நீரை திறந்துவிட்டு 5 நிமிடங்கள், அதாவது இரத்த, வெளியேறும் வரை கழுவுங்கள். (கழுவுவதற்கு ஆக்கஹால் செட்ரி மைடு கார்பாலிக் அமிலம் அல்லது சோப் உபயோகிக்கலாம்)
- நாய் கடித்த இடத்தில் கட்டு போடக்கூடாது. சூரிய ஒளி படும்படி இருக்க வேண்டும்.
- சுண்ணாம்பு, சந்தனம், சாம்பல், பச்சிலைச்சாறு போன்றவற்றை தடவக்கூடாது.
- பின்னர் மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி மட்டுமே உயிர் காக்கும்.
- நாய் கடித்த நாளான்று தடுப்பூசி போடுவதை 0 நாள் என்பர், பின்னர் 3, 7, 14, 28 என முறையே நாட்களை கணக்கிட்டு தடுப்பூசியை ஐந்து முறை செலுத்திக்கொள்ள வேண்டும்.
You must be logged in to post a comment Login