மருத்துவம்
ஆப்பிளை எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது?
பொதுவாக ஆப்பிள் பழத்தை எல்லா நேரமும் சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில் கண்ட நேரங்களில் ஆப்பிளை எடுத்து கொள்வது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
அந்தவகையில் எந்த நேரங்களில் ஆப்பிளை எடுத்து கொள்ள கூடாது என்பதை பார்ப்போம்.
எந்த நேரத்தில் சாப்பிடலாம்?
- ஆப்பிள் பழத்தை காலை வேளையில் சாப்பிடுவதே சிறந்தது. ஆப்பிள் பழத்தின் தோல் பகுதியில் பெக்டின் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. அவை குடல் இயக்கங்கள் சீராக செயல்பட வழிவகை செய்யும்.
- காலை வேளையில் மற்ற பழங்களை விட ஆப்பிள் சாப்பிடுவது குடல் இயக்கத்துக்கு நலம் சேர்க்கும்.
- ஆப்பிளில் இருக்கும் பெக்டின், உடலில் உள்ள லாக்டிக் அமிலத்தை பாதுகாக்க உதவும். பெருங்குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கும் உதவும். அத்துடன் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் காக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி புற்றுநோய் வராமல் தடுக்கவும் செய்யும்.
- மதிய வேளையில் உணவு இடைவெளியின்போது ஆப்பிள் சாப்பிடலாம்.
முக்கிய குறிப்பு
- மாலை வேளையிலோ, இரவிலோ ஆப்பிள் பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அது ஒட்டுமொத்த செரிமான செயல்பாடுகளுக்கும் எதிராக திரும்பி குடல் இயக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
- மேலும் இரவு நேரத்தில் ஆப்பிள் சாப்பிடும்போது வாயு பிரச்சினை உருவாகி அதிகாலை வேளையில் அசவுகரியங்களை ஏற்படுத்தும். ஆப்பிளில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கும் ஏற்றது.
#LifeStyle
You must be logged in to post a comment Login