ஏப்ரல் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாதிமா ஹாதியாவின் வழக்கு இன்றைய தினம் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து தடுத்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவருடைய வழக்குகள் அனைத்தும் கல்முனை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#SriLankaNews