கிளிநொச்சியில் முற்பகை காரணமாக இளைஞன் வெட்டிப் படுகொலை! – நீதவான் உத்தரவு

21 4

கிளிநொச்சி, அக்கராயன் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் – ஈச்சங்குளம் பகுதியில், இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளான்.

கொலை செய்யப்பட்டவர், 24 வயது மதிக்கத்தக்க அதே பகுதியைச் சேர்ந்த கௌரிராஜன் கஜன் ஆவார். இவருக்கு ஒரு குழந்தை இருப்பதாகக் கூறப்படுகிறது. முற்பகை (பழைய பகை) காரணமாகவே இந்தக் கொலை நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாகக் கிளிநொச்சி நீதிமன்ற நீதவானின் உத்தரவுக்கு அமைவாகச் சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக அக்கராயன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version