யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில், இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் ராஜகுலேந்திரன் பிரிந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

