யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: அதிரடிப்படை சீருடையை ஒத்த ஆடை அணிந்த இளைஞர் கைது!

26 696b03e464013

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் (STF) சீருடையை ஒத்த ஆடையை அணிந்திருந்த இளைஞர் ஒருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். நகரில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றின் முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விசேட அதிரடிப்படையினர் அணியும் காற்சட்டையை (Camouflage Trousers) ஒத்த ஆடையை அணிந்து நடமாடிய இளைஞர் குறித்து யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதற்கமைய, நேற்று (16) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இராணுவம் அல்லது பொலிஸாரின் உத்தியோகபூர்வ சீருடைகளை ஒத்த ஆடைகளை அணிவது மற்றும் அத்தகைய ஆடைகளைத் தவறாகப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். பாதுகாப்புச் சூழலைக் கருத்திற்கொண்டு இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

Exit mobile version