image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

Share

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா நடுநிலையாகச் செயல்படவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யாவிற்குப் பதிலாக உக்ரைனையே அதிக விட்டுக்கொடுப்புகளைச் செய்யச் சொல்லி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழுத்தம் கொடுப்பதாக அவர் தெரிவித்தார். “பேச்சுவார்த்தையில் அமெரிக்கர்கள் அடிக்கடி ‘விட்டுக்கொடுப்பு’ (Concessions) என்ற வார்த்தையை உக்ரைனை நோக்கியே பயன்படுத்துகிறார்கள்; ரஷ்யாவிடம் அவர்கள் எதையும் கேட்பதில்லை” என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தப் போரை வரும் ஜூன் மாதத்திற்குள் எப்படியாவது முடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். இதற்காக உக்ரைன் தனது நிலப்பகுதிகளில் சிலவற்றை ரஷ்யாவிற்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும், நேட்டோ (NATO) அமைப்பில் சேரும் முடிவைக் கைவிட வேண்டும் என்றும் ட்ரம்ப் நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. உக்ரைனின் கனிம வளம் மிக்க சுரங்க உரிமைகளை அமெரிக்க நிறுவனங்களுக்கு வழங்குவது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவது, உக்ரைன் தரப்பை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த வாரம் அபுதாபியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய நாடுகளைத் தவிர்த்துவிட்டு அமெரிக்கா நேரடியாக ரஷ்யாவுடன் கைகோர்த்து முடிவுகளை எடுப்பது தங்களுக்குப் பாதகமாக அமையும் என ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார். தங்களுக்கு 15 ஆண்டுகாலப் பாதுகாப்பை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ள போதிலும், குறைந்தது 20 ஆண்டுகால சட்டபூர்வப் பாதுகாப்பு உத்தரவாதத்தை உக்ரைன் கோருகிறது.

தற்போது உக்ரைனின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் ரஷ்யத் தாக்குதலால் சேதமடைந்துள்ள நிலையில், ஒரு கௌரவமான அமைதி ஒப்பந்தத்தை எட்டவே தாம் விரும்புவதாக ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார். “ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பரிசாக எமது நிலங்களை அவர்களுக்குத் தூக்கிக் கொடுக்க முடியாது” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா தனது பொருளாதாரச் சுமையைக் குறைக்கப் போரை உடனே நிறுத்த விரும்பினாலும், அது ரஷ்யாவிற்கு ஒரு வெற்றியாக அமைந்துவிடக் கூடாது என்பதில் உக்ரைன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் உறுதியாக உள்ளன.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...