யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்துடன் தான் உடன்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
அதாவது, ரஷ்ய அதிபர் புடினும் தானும் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு, நீதியான மற்றும் நீடித்த அமைதியைப் பற்றிப் பேசத் தொடங்க வேண்டும் என்ற ட்ரம்ப்பின் கருத்தை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும், அமைதிக்கான இருதரப்பு அல்லது முத்தரப்பு சந்திப்புகளுக்கும் தான் தயாராக இருப்பதாகவும் செலென்ஸ்கி தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.