3 5 scaled
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் இளைஞர் வெறிச்செயல்

Share

அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் இளைஞர் வெறிச்செயல்

அவுஸ்திரேலியாவில் தேசிய பல்கலைக்கழகத்தில் புகுந்து மாணவிகளை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் தலைநகர் கேன்பராவில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது இளைஞர் ஒருவர் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த 24 வயதுடைய இளைஞர் 2 மாணவிகள் உள்பட 3 பேரை கத்தியால் குத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் படுகாயமடைந்த மாணவி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் தாக்குதல் சம்பவம் குறித்து குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞர் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் அவர் இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் அவர் தாக்குதலில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...