உயிரை மாய்த்துக்கொள்வதாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர்..இறப்பிற்கு பின் தெரிய வந்த விடயம்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் காதலை ஏற்க மறுத்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தின் கனசாவி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (22). இவர் நேற்றைய தினம் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
அவரது குடும்பத்தினர் வீடு திரும்பியபோது, சந்தோஷ் சடலமாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தோஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது இறப்பு குறித்து நடந்த விசாரணையில், இளம்பெண் ஒருவரை சந்தோஷ் காதலித்துள்ளார்.
ஆனால், குறித்த பெண் காதலை ஏற்காததால் விரக்தியில் இருந்த சந்தோஷ், தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் உயிரை மாய்த்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.
அதன் பின்னரே அவர் தூக்கில் தொங்கியுள்ளார் என தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.