காதலிக்காக பீட்சா வாங்கி சென்ற இளைஞர் மரணம்: பயத்தினால் ஏற்பட்ட விபரீதம்

8 வயது சிறுமியை தலையில் சுட்டுக் கொன்ற கொடூரன்! காப்பாற்ற போராடிய தந்தை

8 வயது சிறுமியை தலையில் சுட்டுக் கொன்ற கொடூரன்! காப்பாற்ற போராடிய தந்தை

காதலிக்காக பீட்சா வாங்கி சென்ற இளைஞர் மரணம்: பயத்தினால் ஏற்பட்ட விபரீதம்

இந்திய மாநிலம் தெலுங்கானாவில் காதலிக்காக பீட்சா வாங்கி சென்ற இளைஞர் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்ததால் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் மாநிலம் போரபண்டாவில் உள்ள ஒரு பேக்கரியில் முகமது சோயப் (19) என்ற இளைஞர் வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, கடந்த 6 ஆம் திகதி காதலி பீட்சா கேட்டதால், அவருக்கு பீட்சாவை கொண்டு செல்ல முகமது சோயப் முடிவு செய்துள்ளார். பின்னர், அன்று இரவே பீட்சாவை காதலிக்கு கொடுக்க சென்றார்.

அப்போது, காதலியின் தந்தை வந்ததால் பயத்தினால் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால், முகமது சோயப் பலத்தை காயங்களுடன் உஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முகமது சோயப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால், இளைஞரின் குடும்பத்தினரின் புகார் செய்ததையடுத்து சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், 17 முதல் 23 வயதுள்ள இளைஞர்கள் தாமாகவே முடிவெடுத்து வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.

இதனால், அவர்களுடைய பெற்றோர்கள் பிள்ளைகளை நன்றாக கவனிக்க வேண்டும். இளைஞர்கள் சரியான முடிவு எடுத்தால் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று கூறினார்.

Exit mobile version