OIF 2
உலகம்செய்திகள்

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இளம் பெண் எம்.பி உணர்ச்சி பொங்கிய உரை

Share

நியூசிலாந்து மெளரி பழங்குடி பெண் எம்.பி மைபி கிளார்க் பாரம்பரிய வெற்றி முழக்கத்தை நாடாளுமன்றத்தில் முழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நியூசிலாந்தின் மெளரி பழங்குடி பெண் எம்.பியான மைபி கிளார்க் தங்களுடைய வெற்றி முழக்கத்தை முழக்கமிட்டு விட்டு உரையாற்றியது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

170 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றில் 21 வயது இளம் பெண் எம்.பியாக மையி கிளார்க் கடந்த அக்டோபர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஹன்ட்லி பகுதியை சேர்ந்த மையி கிளார்க் நியூசிலாந்து நாட்டின் மெளரி பழங்குடி இனத்தை சேர்ந்தவர்.

நியூசிலாந்தில் மெளரி பழங்குடியினர் தங்களது போர், வெற்றி, ஒற்றுமை மற்றும் இன குழுவின் பெருமை ஆகியவற்றை தங்களது சொல்லால் பயன்படுத்தும் முறையை கொண்டுள்ளனர்.

அதன் படி, அந்த பழங்குடியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 21 வயது இளம் பெண் எம்.பியான மைபி கிளார்க் தனது வெற்றி முழக்கத்தை நாடாளுமன்றத்தில் பேசி அதிர வைத்துள்ளார்.

இந்த முழக்கத்தை கேட்ட சக எம்.பிக்கள் அதை மகிழ்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் கேட்டுக் கொண்டு இருந்தனர்.

Share
தொடர்புடையது
1036524 cigar
செய்திகள்இலங்கை

அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் நாடுகள்: 70.5% உடன் இந்தோனேசியா முதலிடம்; இலங்கை 8வது இடத்தில்!

அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தில் இந்தோனேசியா உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இது...

MediaFile 2
செய்திகள்இந்தியா

நிகழ்நிலை சூதாட்ட செயலி வழக்கு: சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் ரூ. 11 கோடி சொத்துகள் முடக்கம்!

ஒரு குறிப்பிட்ட நிகழ்நிலை சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்...

25 690cc39f76f96
செய்திகள்இந்தியா

மாத்தறை வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் நவம்பர் 28 அன்று தெரிவு: வர்த்தமானி வெளியீடு!

மாத்தறை, வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் (தலைவர்) எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி தெரிவு...

24 6718a970f1422
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு தாழங்குடாவில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதல்: சஹ்ரான் குழுவின் வெடிகுண்டு சோதனை நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் பரபரப்பு!

மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியில் சஹ்ரான் குழுவினரால் வெடிகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்தை அண்மித்த ஒரு...