sss scaled
உலகம்

உலகின் மிக நீளமான சைக்கிள்: கின்னஸ் சாதனை படைத்த டச்சு பொறியாளர்கள்

Share

உலகின் மிக நீளமான சைக்கிள்: கின்னஸ் சாதனை படைத்த டச்சு பொறியாளர்கள்

உலகிலேயே மிக நீளமான சைக்கிளை தயாரித்து டச்சு பொறியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இந்த சைக்கிளை 8 டச்சு பொறியாளர்கள் 180 அடி நீளத்தில் உருவாக்கியுள்ளனர்.

இதனையடுத்து இந்த சைக்கிள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

இந்தநிலையில், டச்சு பொறியாளர்கள் குழுவில் இருந்த 39 வயதான இவான் ஷால்க் தனது சிறு வயதில் இருந்தே இந்த நீளமான சைக்கிளை உருவாக்க வேண்டும் என்ற கனவை இப்போது நனவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உலகின் நீளமான சைக்கிள் என்ற சாதனை கடந்த 60 ஆண்டுகளில் பலமுறை முறியடிக்கப்பட்டுள்ளது.

முதன் முறையாக 1965 ஆம் ஆண்டு ஜெர்மனியில் (Germany) 26 அடி நீளத்தில் உலகின் முதல் நீளமான சைக்கிள் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
13845820 trump 12
செய்திகள்உலகம்

வெளிநாட்டினர் அமெரிக்காவில் புலம் பெயர்வதற்கான தடை நீண்ட காலம் நீடிக்கும்: ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!

வெள்ளை மாளிகைக்கு அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது ஆப்கானிஸ்தான் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச்...

l91920251128120058
செய்திகள்உலகம்

இம்ரான் கான் வெளிநாடு செல்ல அரசு அழுத்தம்: பிடிஐ செனட் உறுப்பினர் குர்ராம் ஜீஷன் பரபரப்புத் தகவல்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் (Adiala Jail) உயிரிழந்துவிட்டதாகச்...

articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

MediaFile 22
உலகம்செய்திகள்

ஹொங்கொங் உயரமான வீடமைப்பு வளாகத்தில் பயங்கர தீ: 13 பேர் பலி, 28 பேர் காயம்!

ஹொங்கொங்கில் உள்ள உயரமான வீடமைப்பு வளாகம் ஒன்றில் இன்று (நவம்பர் 26) ஏற்பட்ட பயங்கர தீ...